Our Feeds


Saturday, July 20, 2024

Sri Lanka

VIDEO: ஹூதிகள் கட்டுப்பாட்டு யமன் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதல் | பதிலடி பலமாக இருக்கும் என ஹூதிகள் எச்சரிக்கை!



பலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்து இஸ்ரேல் என்றொரு நாட்டை உருவாக்கியது மட்டுமன்றி தொடர்ந்தும் பலஸ்தீன அப்பாவிகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மீது பலஸ்தீன சுதந்திர போராளிகளும், அவர்களுக்கு உதவியாக ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்களும் பாரிய தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த அக்டோபர் 7 ம் திகதி 2023 இல் பாலஸ்தீன அரசாங்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து பாலஸ்தீன அப்பாவிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 39 பேர் கொல்லப்பட்டு 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் வழங்க வேண்டும். பாலஸ்தீனம் மீதான இன அழிப்பு தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் எனக் கூறி இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளில் கப்பல்கள் மீது யமனிலிருக்கும் ஹூதிகள் செங்கடலில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். 

இந்தத் தாக்குதல்களின் தொடராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னராக இஸ்ரேல் தலை நகர் டெல்அவிவ் மீது பாரிய ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது ஹூதிகள் படைப் பிரிவு.

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஹூதிகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக இன்று யமனின் ஹூதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹூடைடா துறைமுகம் மீது இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானிய கூட்டுப்படைகள் நடத்திய பாரிய தாக்குதலில் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாரிய எண்ணை வயல் ஒன்று தீப்பிடித்து எரிகிறது. 

தம் மீதான தாக்குதலுக்கு பெரும் விலையை இஸ்ரேல் கொடுக்க வேண்டிவரும். பதிலடி பலமாக இருக்கும் என ஹூதிகளின் ஊடகப் பேச்சாளர் யஹ்யா சாரி சற்று முன்னால் அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »