#மனோ கணேசன்
எனக்கு எதிராக சில மலையக நகரங்களில், இதொகாவின் சிறுவர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்வதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், சிறுவர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல், ஓரமாக போய் விளையாட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மனோ எம்பி மேலும் கூறி உள்ளதாவது;
பட்டாசு கொழுத்தி, மண் சோறு பொங்கி, குழந்தைகள் ஆர்ப்பாட்ட விளையாட்டு விளை ஆடட்டும்.
ஆனால், வீதி போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக போய், விளையாட வேண்டும் என இந்த சிறுவர்களுக்கு அறிவுரை கூறுகின்றேன்.