22ம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனியார் செய்திச் சேவையுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.