Our Feeds


Tuesday, July 2, 2024

Sri Lanka

ஞானசார தேரரை விடுதலை உலமா சபையுடன் பேச்சு | முக்கிய பௌத்த பிக்குகள் முடிவு



திருமறைக் குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் குழுவொன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு விஜயம் செய்து கலந்துரையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


தேசிய சங்க கூட்டமைப்பு, ராவணா சக்தி, சிங்கள அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 30) ​​ஆரம்பமாக அஸ்கிரி மகா விகாரைக்கு வந்து அஸ்கிரிய பிரிவின் தலைமை தேரருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


அதன் பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு வந்த பிக்குகள் குழுவினர் மல்வத்து மகா விகாரையின் மஹா தலைவர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.


இங்கு, கடந்த வெசாக் நோன்மதி தினத்தன்று, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு பெளத்த உயர் பீடங்கள் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியதாகவும், ஆனால் அது தொடர்பில் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் இரு பீடாதிபதிகளும் குறிப்பிட்டுள்ளனர்.


ஆனால் இது குறித்து மீண்டும் ஒருமுறை விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இதன்போது கருத்து வெளியிட்ட இராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், ஜனாதிபதியிடம் கலந்துரையாடியது போலவே ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகிய இரு தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடிய போதும்,  ஜம்மியத்துல் உலமாவிடம் இது குறித்து கலந்துரையாடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.


அதன்படி, உலமா சபையுடன் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »