ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் நாட்டில் இரத்தக்களரி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.