ஐக்கிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு முஸ்லீம்கள்
தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் காலி பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க இலங்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடனேயே தனது அரசாங்கம் ஆட்சிக்குவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களின் ஆதரவை பெற்ற அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என எதிர்பாத்துள்ளதாக தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க ஐக்கிய அரசாங்கமொன்றை உருவாக்குதே தனது கட்சியின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
சிங்களவாக்காளர்களின் வாக்குகளுடன் தேர்தலை வெல்வது மாத்திரம் எங்களிற்கு போதுமானதல்ல என தெரிவித்துள்ள அவர் வெற்றிபெறுவதற்கு சிங்களமக்களின் வாக்குகள் போதுமானவை ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம்,எங்கள் இயக்கம் தேர்தலில் வெற்றிபெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டதல்ல,உண்மையின் நலனை அடிப்படையாகவைத்தே எங்கள் இயக்கம் அரசியலில் ஈடுபடுகின்றது,என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் எந்த சமூகமாவது பாரபட்சத்தை எதிர்கொண்டால் எங்கள் இயக்கம் அவர்களிற்கு ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தீர்ப்புகளிற்கு எதிராக செயற்படுகின்றார் நேற்று நடந்தது மாத்திரமே அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு போதுமானது என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சஜித்பிரேமதாச குறித்து நான் அதிகம் பேசுவதில்லை அவரை நாங்கள் பேசவிடுகின்றோம் அது எங்களிற்கு தேவைக்கு அதிகமான பலனை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.