பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“முடிந்தவரை விரைவாக” முடிவுக்கு வர வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் இராணுவத்தை நிறுத்தியிருப்பது சட்ட விரோதமானதாக கருதுவதாக நீதிமன்றத்தின் தலைவர் நவாஸ் சலாம் தெரிவித்துள்ளார்.
2005இல் காசா பள்ளத்தாக்கிலிருந்து இஸ்ரேல் வெளியேறியமை ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவில்லை ஏனென்றால் இஸ்ரேல் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.