Our Feeds


Sunday, July 7, 2024

SHAHNI RAMEES

மாணிக்க கங்கையில் நீராடச் சென்றவரை இழுத்துச் சென்ற முதலை

 


மாணிக்க கங்கையின் 02ஆம் பாலத்திற்கு அருகில் நேற்று

(06) காலை நீராடச் சென்ற நபரை முதலை ஒன்று இழுத்துச் சென்ற நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.


 


இந்நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் படையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


 


உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், மாணிக்க கங்கையில் நீராடும் போது அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »