Our Feeds


Wednesday, July 31, 2024

Sri Lanka

இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது!


மலேசியா கோலாலம்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் ஏர் ஏசியா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, இவரது பயணப்பொதிகளிலிருந்து 25 இலட்சம் ரூபா பெறுமதியான 245 இலத்திரனியல் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »