Our Feeds

Sunday, July 21, 2024

SHAHNI RAMEES

சாய்ந்தமருதில் மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் உயிரிழப்பு..!

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில்  மருமகனின் தாக்குதலினால் மாமனார் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

மாமனாரை தாக்கிய 32 வயதுடைய மருமகன் தலைமறைவாகியுள்ளார்.

திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிந்துள்ளதாக அடிப்படை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அடிக்கடி தனது மாமனாருடன் தகராறு செய்துவந்த மருமகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் முன்னதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த 62 வயதுடய நபரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »