Our Feeds


Tuesday, July 30, 2024

Sri Lanka

என்னை விடுவிக்க முஜிபுர் ரஹ்மான் கடிதம் தரவில்லை. - அஸாத் சாலியும் என்னை கைவிட்டு விட்டார் - ஞானசார தேரர் ஆதங்கம்.



நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அண்மையில் பிணையில் விடுக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் அவர் நேற்றைய தினம் தனியார் இணையத்தள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தான் ஆவேசப்பட்டு கருத்துக்களை வெளியிடும் போது தன்னை அறியாது மக்கள் மனது வேதனைப்படுவதை நான் நன்கு அறிந்து கொண்டேன் எனத் தெரிவித்திருந்தார்.


கடந்த 2016 மார்ச் 30ம் திகதி கூரகல விகாரை தொடர்பில், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டதை தான் ஏற்றுக் கொண்டதாகவும் அதற்காக நீதிமன்றம் ஊடாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகவும் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.


மேலும், தன்னை ரணில் விக்கிரமசிங்க சிறைக்கு அனுப்பவோ, அவர் சிறையில் இருந்து விடுவிக்கவோ இல்லை என்றும் இது நீதிமன்ற வழக்கிற்கான தீர்ப்பு என நினைவு கூர்ந்தார்.


தனக்கு பொது மன்னிப்பு வழங்கும் நோக்கில் ஜனாதிபதி வழக்கினை பதிவு செய்தோரிடம் இருந்து கடிதம் கோரியிருந்தார். அது தவறில்லை இப்போதைய புதிய நடைமுறை அது. தான் அதனை பிழை என்று கூறவில்லை என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.


தன்னை ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் வெளியே எடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருந்ததாகவும் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடமும் இது குறித்து பேசியிருந்ததாகவும் அதற்கு அவர், “எனக்கு ஞானசார தேரருடன் எந்த பிரச்சினையும் இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அவருக்காக முன்நிற்போம். ஆனால் எம்மால் கடிதம் வழங்க முடியாது. ஏனென்றால் எமக்கு ஜனாதிபதி அந்த கடிதத்தினை எதற்கு பயன்படுத்துவார் என்று தெரியாது” என்று தெரிவித்ததாக தேரர் தெரிவித்திருந்தார்.


பின்னர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை விரல் நீட்டினர். உலமா சபையோ சாக்குப்போக்குகளை தெரிவித்து வந்தனர். அத்துடன் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டதாக தெரிவித்த தேரர், தான் அசாத் சாலிக்காக பல இடங்களில் முன்னின்று பேசியவன் என்றும், அவரை சிறையில் அடைத்த போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அப்போது கூட தான் சென்று பார்த்ததாகவும் பின்னர் ஊடகங்கள் முன்னிலையிலும் அவருக்காக குரல் கொடுத்தேன் என்றும் தெரிவித்திருந்தார். என்றாலும் அவர் அவற்றை நினைவுகூறவில்லை என்று நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ரிஷாத் பதியுதீன் இதில் தலையிடவில்லை என்றும் தனக்கு தெரிந்தவரைக்கும் அவரால் எந்தப் பிரச்சினையும் எழவில்லை என்றும் தெரிவித்தார்.


தான் சிறையில் இருக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ, துமிந்த, சரத் வீரசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இன்னும் நான்கு ஐந்து எம்பிக்கள் தன்னை நலம் விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »