தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வைத்திய வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்கவை தகுந்த நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்னவின் இணக்கப்பாட்டுடன் கலாநிதி கபில விக்கிரமநாயக்க சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஷஷி மகேந்திரன் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த மனுவைத் தக்கவைக்க முடியாது என்று எதிர்மனுதாரர் எழுப்பிய அடிப்படை ஆட்சேபனைகளை நிராகரிப்பதாகக் கூறினார்.
மனுதாரரின் வைத்தியர் வெளிநாட்டில் இருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுதாரரை விளக்கமறியலில் வைக்க போதிய ஆதாரங்கள் இல்லையென்றும் கூறினார்.
இதன்படி மனுதாரரை தகுந்த நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.