அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலாஹரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.
பராக் ஒபாமாவின் இந்த ஆதரவு காரணமாக கமலா ஹரிஸ் அமெரிக்க அரசியலில் தீவிரமாக செயற்படும் ஜனநாக கட்சியின் தலைவர்களில் அனேகமானவர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
பில் கிளின்டன் ஹரி கிளின்டன் என ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் உடனடியாக கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்ட போதிலும் ஒபாமா ஆதரவை வெளியிடாதது கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
தனது மனைவியுடன் இணைந்து கமலாஹரிசினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
"ஐபோனில் ஹரிஸ் ஒபாமாவை செவிமடுப்பதை வீடியோவில் காணமுடிகின்றது.நான் கமலா குறித்து பெருமிதம் அடைகின்றேன் ,இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக விளங்கப்போகின்றது என மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
வாகனமொன்றிற்கு அருகில் நின்றபடி பதிலளிக்கும் கமலாஹரிஸ் கடவுளே மிச்செல் ஒபாமா இது எனக்கு மிகப்பெரிய விடயம் என தெரிவிக்கின்றார்.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தனை வருடங்களாக நீங்கள் பேசிய வார்த்தைகளும், நீங்கள் கொடுத்த நட்பும், என்னால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகம் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எனவே இருவருக்கும் நன்றிஎன அவர் தெரிவிக்கின்றார்.