பெருந்தோட்ட நிறுவனங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு தான் முகம் கொடுக்க நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தயாராக உள்ளதாக அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு இன்று திங்கட்கிழமை (01) திகதி வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியமான 1700/= ரூபாய் வழங்குவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக தெரிவித்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.