அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக திலங்க சுமதிபாலவினால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை விசாரிப்பதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், இடைக்கால தடைவுத்தரவு ஆகஸ்ட் 06ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.