வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்குவார்கள் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றிப் பெறுவார்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் 2022 ஆம் ஆண்டு நிலைவரமே மீண்டும் ஏற்படும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்கள். ஆகவே பொதுஜன பெரமுன சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் போட்டி நிலவும்.அரகலயவின் போது மக்கள் மத்தியில் ஜே.வி.பியினருக்கு இருந்த செல்வாக்கு தற்போது முழுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது. அனுரகுமார திஸாநாயக்கவின் பேச்சு கேட்பதற்கு அருமையாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார்.