பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த மதபோதகர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் போதகரான குறித்த சந்தேகநபருக்கு எதிராக, பணமோசடி குற்றச்சாட்டில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகாமல் குறித்த மதபோதகர் தலைமறைவாகி வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் 7 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மட்டக்களப்பில் வைத்து இன்றைய தினம் அவர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.