Our Feeds


Saturday, July 20, 2024

Zameera

குறிப்பிட்ட சில கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க வேண்டி ஏற்படும்


 அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருள்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நலின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நுகர்வோர் சட்டத்தில் திருத்தம் செய்ய சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும், நுகர்வோர் மற்றும் வர்த்தகர் இடையே உள்ள புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி, தற்போது வாரத்திற்கு ஒருமுறை 15 அத்தியாவசியப் பொருட்களின் விலையை அறிவித்து வருகின்றோம். ஆனால் அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோர்களுக்கு கிடைக்காமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் வர்த்தக சங்கங்களுடன் இது குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். நாம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்ய நேரிடும் என்பதையும் கூற வேண்டும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »