Our Feeds


Saturday, July 20, 2024

Sri Lanka

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த போட்டி: பொதுஜன பெரமுன விரும்பும் சட்டத்திருத்தம்.



இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்புகள் இன்னமும் வெளியாகாததால் அக்கட்சிக்குள் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.


ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்நிறுத்த வேண்டுமென அமைச்சரவையில் இருக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


என்றாலும், அக்கட்சியில் உள்ள பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவின் தரப்பினர், பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி,


22வது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பதாக இருந்தால் அதற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால், தேர்தலை பிற்போடும் சரத்துகளை அதில் உள்வாங்கினால் அதற்கு அனுமதியளிக்க மாட்டோம்.


அதேபோன்று 22வது திருத்தச்சட்டத்தின் ஊடாக 19வது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்கள் குறைந்து ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »