சேவை அரசியலமைப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (01) இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்கவுடன் இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காத பட்சத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.