ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார செவ்வாய்க்கிழமை (24) கோரிக்கை விடுத்துள்ளார்.
“இலங்கையில் 17 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 52 வானொலி அலைவரிசைகளும் உள்ளன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
எனவே ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென நான் முன்மொழிகிறேன்” என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.