Our Feeds


Wednesday, July 10, 2024

Sri Lanka

ஓபன் ஏ.ஐ. நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகிய மைக்ரோசொப்ட் நிறுவனம்.


செட் ஜி.பி.டி. உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை உருவாக்கியுள்ள ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து மைக்ரோசொப்ட் விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களுக்கு பிறகு நிறுவனம் சாதகமான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இன்னமும் தங்களின் பங்களிப்பு தேவையிருக்காது என மைக்ரோசொப்ட் விலகியுள்ளது.


செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த கடித்தத்தில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தாங்கள் வகித்த பார்வையாளர் (ஒப்சர்வர்) என்கிற பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளாது.


செய்யறிவு நிறுவனத்தின் தலைமையும் நிர்வாக குழுவும் தங்களின் இந்த முடிவுக்கு ஆதரவளித்ததை பாராட்டியுள்ள மைக்ரோசொப்ட், கடந்த 8 மாதங்களாக புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நிறுவனம் செல்லும் பாதையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் என்கிற பொறுப்புக்கு இனி அவசியமில்லை எனவும் மைக்ரோசொப்ட் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையில்லா விசாரணைக்கு மத்தியில் இந்த விலகல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் 13 பில்லியன் அமெரிக்க டொலர் ஓபன் ஏ.ஐ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. மேல்மட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஏ.ஐ. நிறுவனங்களின் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) குறித்து ஐரோப்பிய யூனியன் ஆழமாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம், பிரிட்டன் போட்டி ஆணையம் அமைப்புகளும் ஆய்வு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.


நிர்வாக குழு மற்றும் நிறுவனத்தின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது ஓபன் ஏ.ஐ.


ஓபன் ஏ.ஐ. தனது முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களான மைக்ரோசொப்ட், ஆப்பிள், ட்ரைவ் கெப்பிடல், கோஸ்லா வென்சர்ஸ் ஆகியோருக்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கும் அணுகுமுறை கையாளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »