ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியில் உள்ள தேர்தல் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘சிறிகொத்த சதிப்புரட்சிக்கு இடமளிக்காதீர்கள், ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துங்கள், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை உடனடியாக அமுல்படுத்துங்கள்’ என்ற பதாதைகளை ஏந்தியவாறு ‘பிரஜைகள் கூட்டணி’ உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர்.