Our Feeds


Wednesday, July 10, 2024

Sri Lanka

ரயில் நிலைய அதிபர்கள் விடுத்துள்ள சவால் !



சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பிற்கு அமைய தமது சேவையின்றி ரயில் சேவையை முன்னெடுத்து செல்ல முடியுமாயின் அதனை செய்து காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

அதன் தலைவர் சுமேத சோமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

எங்களுக்கு பயமில்லை, வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார்.
இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல தொழிற்சங்கங்கள் திரளும்.ரயில் நிலைய அதிபர் ஒருவர் கூட இந்த கடிதங்களுக்கு பயப்படப்போவதில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்து அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்,
'' என்றார்.

ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே விடுத்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று மதியம் 12.00 மணிக்கு அந்தந்த ரயில் நிலையம் அல்லது அருகில் உள்ள ரயில் நிலையத்தில் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என உரிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பொருட்படுத்தாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சேவையில் இருந்து விலகி சென்றதாக கருதப்படுவார்கள் என ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே தெரிவித்துள்ளார்.

இலங்கை ரயில் ​சேவை, அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படுள்ள நிலையில், இந்த பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »