ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக பெரேராவை களமிறக்க மொட்டு கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்களன்று நெலும் மாவத்தை கட்சி காரியாலயத்தில் கூடும் அக்கட்சி உயர்மட்ட குழு இறுதி தீர்மானத்தை எடுக்குமென தெரிவிக்கப்படுகிறது.
டி பி எடியூகேஷன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு இலவச கல்வியை பெற்றுக்கொடுக்கும் இலங்கயின் முன்னனி செல்வந்த வர்த்தகராக இருக்கும் தம்மிக பெரேரா ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.