Our Feeds


Wednesday, July 31, 2024

Sri Lanka

“ஜனாதிபதி ரணில்” என்பதை ஏற்றுக்கொள்கிறோம் - மௌலவி முனீர் முலஃப்பர்.



சுற்றுப்புற பிரதேசங்களில் ரணில் ஜனாதிபதி என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது செப்டெம்பர் 21 ஆம் திகதி மாத்திரமே. நிச்சயமாக தோழர் அநுர குமார திசாநாயக்க தோ்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

"ஒன்றாக வெற்றிபெறுவோம்" என்று போராட்டக் கோஷத்தை தொடங்கியிருக்கிறார்கள். அந்த வெற்றி எவருக்காக? இந்த நாட்டு மக்களுக்கு அல்ல. அது அவர்களின் வகுப்பைச் சோ்ந்தவர்களுக்கு. மக்களின் வெற்றி இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே என்பதை வலியுறுத்தி கூறவிரும்புகிறேன்.

அவர்கள் உங்களுக்கு அருகில் வந்து பல வருடங்களாக பல்வேறு சக்திகளை அமைத்துக் கொண்டது அவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே. தேசிய மக்கள் சக்தி நாடு பூராவும் சென்று பல்வேறு சக்திகளை சோ்த்துக் கொண்டது அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்காக அல்ல; நாட்டின் மக்கள் அனைவருக்கும் சாதகமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுப்பதற்காகவே.

மொட்டுக் கட்சியில் இருக்கின்ற திருடர்கள் அத்தனை பேரும் ஐக்கிய மக்கள் சக்தி மேடையில் ஏறியதும் எப்படி நல்லவர்களாக மாறுவார்கள் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தியை சுற்றி இணைந்திருப்பவர்கள் கள்வர்களுடன் இருந்த சக்திகளல்ல. மக்களுடன் இருந்த சக்திகளே என்பதை நாங்கள் வலியுறுத்த வேண்டும்.

ஊழலற்றவர்களாக செயலாற்றக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை முழு நாடுமே விளங்கிக்கொண்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »