அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வேதனப் பிரச்சினையை முன்னிறுத்தி, தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.