எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை
தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கலந்துரையாடல் நாளை (29) மாலை 4.00 மணிக்கு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதுடன், கட்சியினால் வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என ஏனையோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டாக பிளவுபடுவதா அல்லது ஒன்றாக முன்னோக்கி செல்வதா இல்லையா என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.