நாளை முதல் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய இரண்டாவது கிலோமீற்றருக்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் என்ற பயணக் கட்டணம் நாளை முதல் 90 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.