Our Feeds


Saturday, July 13, 2024

Sri Lanka

அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு ஆபத்து - சாரதிகள் அவதானம்


அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாமென தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.

போலியான தந்திரோபாயங்கள் மூலம் புகை பரிசோதனை சான்றிதழைப் பலர் பெறுகின்ற போதிலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் வீதியில் வாகனங்கள் செலுத்தும் போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »