Our Feeds


Thursday, July 25, 2024

Sri Lanka

வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை அதிகரிக்கவும் டலஸ் அழகப்பெரும எம்.பி. கோரிக்கை



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் கட்டுப்பணத்தை 25 இலட்சமாகவும் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 இலட்ச மாகவும் திருத்தம் செய்ய வேண்டும் என எதிரணி யின் சுயாதீன எம்.பி.யான டலஸ் அழகப்பெரும வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களுக்கான கட்டுப்பணத்தை திருத்தம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தது.இந்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க தேர்தல் சட்டத்துக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா கட்டுப்பணமும் சுயாதீன வேட்பாளரிடமிருந்து 75 ஆயிரம் ரூபா கட்டுப்பணமும் அறவிடப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக் கப்பட்டது.எவ்விதமான வரையறைகளும் இல்லாமல் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அரச நிதியே வீண்விரயமாக்கப்படுகிறதுஎன்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »