ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு
ஓகஸ்ட் 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்ட இம்ரான்கான் உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்துக்கு பாகிஸ்தான்தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் நேற்று (26) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட பொலிஸார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.