2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தபால்மூல விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அதாவது மாவட்ட தேர்தல் அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஒரே மாதிரியான பெயர்கள் இருப்பதால், தபால்மூல விண்ணப்பதாரர்கள் தங்கள் தகவல்களை வேறொருவருடன் சரிபார்த்து, தபால்மூல விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொள்கிறது.
தபால் மூலம் வாக்களிக்கும் வசதியைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இணையதளத்தில் இருந்தும் இலவசமாகப் பெறலாம்.
தபால் மூலம் விண்ணப்பிக்க தகுதியுடைய அனைவரின் விண்ணப்பங்களும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி அல்லது அதற்கு முன் சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கிடைக்கப்பெற வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பிக்க இறுதி நாளான ஆகஸ்ட் 5 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும்.
அன்றைய திகதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனையின்றி நிராகரிக்கப்படும் என, தேர்தல் ஆணைக்கு தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Monday, July 29, 2024
தபால்மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »