ஹிங்குரக்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில், நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காகக் கடந்த பாதீட்டில் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் இங்கிலாந்தின் ரோயல் விமானப்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகும்.