மவ்பிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு அடுத்த திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாகவும் சர்வஜன அதிகார கூட்டணியாகவே இந்தத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையா டல்கள் சர்வஜன அதிகார அரசியல் கூட்டணி மட்டத்தில் இடம்பெற்று வருவதாக மவ்பிம ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஞ்சித் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்ததன் பின்னர் நேற்று (29) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும்,
“அடுத்த வாரத்தில் எங்களின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்போம். சர்வஜன அதிகாரம் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவோம்.
அநேகமாக, அடுத்த திங்கட்கிழமையாகும் போது எங்கள் தரப்பின் வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை அறிவிக்கக் கூடியதாக இருக்குமென எதிர்பார்த்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, July 30, 2024
மவ்பிம ஜனதா கட்சி தீர்மானம் திங்களன்று!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »