உலகப் பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கு தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துக்கொண்டு தம்பதிகளை வாழ்த்தி வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கையில் இருந்து பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தனவும் கலந்துக் கொண்டுள்ளனர்.