எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற பிரேரணை நேற்று இடம்பெற்ற “ஒன்றிணைந்து வெல்வோம் – நாம் கம்பஹா” பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட மக்கள் சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் கைகளை உயர்த்தி ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.