Our Feeds


Thursday, July 18, 2024

Sri Lanka

உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது மகாவம்சம்



பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கையின் வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது.


இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் கலந்து கொண்டார்.


யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் மகாவன்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான சான்றிதழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.


அத்துடன், பல்கலைக்கழகத்துகு்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் பிரதி வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச, பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »