9ஆவது மகளிர் ஆசியக் கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடரின்
இறுதிப் போட்டி இன்று இடம்பபெற்றது .ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. அதன்படி போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 18 ஓவர்கள் நிறைவில் 167 ஓட்டங்களை பெற்று ஆசியக்கிண்ணத்தை வெற்றிக் கொண்டது