பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் அது ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு, தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.