Our Feeds


Friday, July 19, 2024

Sri Lanka

பாராளுமன்றக் கலைப்புக்கு ரணில் தயார் !



பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட வுள்ள நிலையில், இந்தச் சட்டமூலத்துக்கு ஒருவேளை ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றிரவே பாராளுமன் றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாயத்தமாக வைத்துள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்தால் அதனூடாக ஜனாதிபதியின் ஆயுட்காலத்தை ஆறு வருடங்களாக நீடித்து 2025, நவம்பர் மாதம் வரை ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட் டார்.

இதுதொடர்பில் நேற்று (18) ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்தே இதனைச் சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள விசேட அதிகாரமான பாராளுமன்றைக் கலைக்கும் அதிகாரத்தின்மீது அவரின் கவனம் திரும்பியுள்ளது என்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நேற்று முன்தினமாகும்போது (17) இதுதொடர்பில் எங்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதே போன்று, இந்த விடயம் தொடர்பில் பலர் எங்களிடம் கேள்வி எழுப்பியுமிருந்தனர்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு கிடைக்காவிட்டால், அன்றிரவே பாராளுமன்றத்தை காலைப்பதற்காகவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறித்தலை தயார் செய்து ஜனாதிபதி கையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார். இதுவே தற்போதுள்ள நிலைமையுமாகும்.

இதன் பிரதிபலனாக ஒருவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்துவது வரையில் நாட்டின் அரசியல் நிலைவ ரங்கள் மாற்றமடையும் தீர்மானங்களை எடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம், இந்த சகல அதிகாரங்களும் தற்போது ஜனாதிபதியின் வசமே இருக்கிறது. அதனால், அவரால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளு மன்றத்தை கலைக்க முடியும்.

2022ஆம் ஆண்டு நெருக்கடி நிலைமையின் பின்னர் தற்போதைய ஜனாதிபதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அரசாங்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அவருக்கு ஆதரவு வழங்குவதே இரு தரப்பினருக்கும் இடையில் இருந்த இணக்கப்பாடாகும். மேலும், தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடையும் சரியான தினம் வரையில் பாராளுமன்றத்தை கலைக்கப்படமாட்டாது என்றும் ஆனால் அரசாங்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொதுஜன பெரமுனவின் ஆதரவு தனக்கு அவசியம் என்றும் பதவியேற்றபோது எங்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.

இருந்தபோதும், பொதுஜன பெரமுனவின் அந்த ஒத்துழைப்பை வழங்காமல் ஜனாதிபதி பதவிக்கு சவாலை ஏற்படுத்தும் நிலைமையே உருவாகியுள்ளது. அவர்களால் தெரிவுசெய்யப் பட்ட ஜனாதிபதிக்கு அவர்களே சவால்விட்டு வருகிறார்கள்.

எனவே, இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

மறுபுறம், பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினர் ஜனாதிபதிக்கு நேரடியாக ஆதரவளிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருசாரார் வேறொரு நபரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி, அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைமைத்துவத்தை பெற்று எதிர்க் கட்சியில் அமர்வதற்கு தயாராகி வருகின்றனர்.

இறுதியாக, இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கமின்மை, மோதல் அல்லது பிளவு என்பனவே வெளிப்படுகின்றன. 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த திருத்தத்துக்கு பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் ஆதரவளிப் பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அவ்வாறு இடம்பெற்றால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க வர்த்தமானியை ஜனாதிபதி தயாராக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஒருவேளை, 22 ஆவது திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, யாராவது உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து, சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் அதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டி ஏற்படும்.

சர்வசன வாக்கெடுப்பில் தோல்வியடை வதற்கான வாய்ப்புகளும் இல்லை. எனவே, சர்வசன வாக்கெடுப்பின் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டி ஏற்படும். மேலும், நான்கு அல்லது ஐந்து மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கவும் முடியாது.

ஒருவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலம் 06 வருடங்கள் என மக்கள் தீர்ப்பளித்தால் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கும். அதாவது, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம். எது எவ்வாறாக இருந்தாலும் இந்த செயற்பாடு தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது.

இந்த அரசியலமைப்பு திருத்தமே ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு பயன்படுத்தப்படும் இறுதி துருப்புச் சீட்டாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »