மக்கள் ஜனாதிபதியாக ரணிலை தேர்ந்தெடுத்தனர் நாம் அவருடன் பயணிக்கிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ.
“..மக்கள் ஆணையில் வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டிய மக்கள் ஜனாதிபதியாக ரணிலை தேர்ந்தெடுத்தனர். அவருடன் தான் நாம் இப்போது பயணிக்கிறோம்.
மக்கள் கூறினார்கள் அதையே நாம் செய்கிறோம். வரியை குறைக்கச் சொன்னார்கள் அதை செய்தோம். 2019ம் ஆண்டு முன்வைத்த கோட்பாடுகளை அப்படியே நாமும் செய்தோம்.
இந்நாட்களில் மேடைகளில் பேசப்படும் உரைகள் காரசாரமாக இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஒருபோதும் ஜனாதிபதிக்கு எதிராக காரசாரமாக பேசியதில்லை. இப்படித்தானே, மேடையில் பேசுவதில் முழுமையாக ஊடகங்கள் ஒளிபரப்பு செய்வதில்லையே, அதில் காரசாரமாக உள்ளதையே வெட்டி எடுக்கின்றனர். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்… செய்தியை கதையைப் போல் உருவாக்கித்தானே மக்களுக்கு வழங்குகிறார்கள்.
தம்மிக பெரேரா வருவதாகக் கூற உதயங்க வீரதுங்கவிற்கு என்ன அருகதை இருக்கிறது? அவருக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லையே.. அவர் பாராளுமன்றம் கலைவதாக கூறினார், எங்கே கலைக்கப்பட்டதா? இதெல்லாம் யூடியூபர்கள் அவர்களது வருமானத்திற்காக செய்யப்படும் இலவச விளம்பரங்கள்.. உண்மை அதுதான்.. அது சமூக ஊடக வியாபாரம்.
நாம் ஜனநாயக ரீதியாக முன்னெடுத்து செல்லும் கட்சி. எமது கட்சிக்கு இந்த வியாபாரம் எல்லாம் தேவையில்லை.. நாம் மக்களுக்கானது..”