இலங்கையை பிரதிநிதிப்படுத்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு போட்டியாளர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்.
பூப்பந்தாட்ட போட்டி வீரரான வீரேன் நெட்டசிங்க ஸ்பெயின் வீரருடன் மோதி தோல்வியடைந்தார்.
இதேவேளை, நேற்று நடைபெற்ற 100 மீற்றர் பிரீ ஸ்டைல் நீச்சல் ஆரம்ப சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட கைல் அபேசிங்க போட்டியில் 8ஆவது இடத்தை பெற்று முதல் சுற்றுடனேயே வெளியேறினார்.
இந்நிலையில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூப்பந்து வீரர் வீரேன் நெட்டசிங்க, நீச்சல் வீரர் கைல் அபேசிங்க ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறி நாளை (01) இலங்கைக்கு வரவுள்ளனர்.