ICC T20 உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்திய இந்திய அணிக்கு, தாய் நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்றிணைந்து வரவேற்பளித்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக இந்திய அணிக்கு தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், உலகக் கிண்ணத்தை சுவீகரித்த இந்திய அணி நேற்று புதுடெல்லி நகரை வந்தடைந்ததாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இந்திய அணி வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததுடன், பிரதமர் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர், இந்திய அணி வீரர்கள் மும்பை நோக்கி பயணித்துள்ளனர்.
மும்பை வீதிகளில் ஒன்று திரண்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்திய அணி வீரர்களுக்கு அமோக வரவேற்பளித்துள்ளனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.