Our Feeds


Saturday, July 13, 2024

Sri Lanka

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 5 ரூபா !


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய தொகை ஐந்து ரூபாவிற்கும் குறைவாக இருக்க வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஒவ்வொரு வாக்காளருக்காகவும் குறைந்தது ஐந்து ரூபா செலவிட்டாலும், மொத்த வாக்காளர்களுக்கு எட்டரை கோடி ரூபா வேட்பாளர் செலவு செய்ய வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையேயான விவாதத்திற்குப் பிறகு, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஒரு வாக்காளர் சார்பாக ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் ஒரு வேட்பாளருக்கு பிரசாரம் செய்ய செலவிடப்படும் தொகை 20 ரூபாயென முடிவு செய்யப்பட்டது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் 17,000,000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வேட்பாளர் 20 ரூபாச் செலவு செய்தால் அந்த வேட்பாளர் செலவிட்ட மொத்தத் தொகை 34 கோடி ரூபாவாகும்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து 21 நாட்களுக்குள் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தக் கணக்குகளை வெளியிடாத வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், மேலும் உண்மையான செலவுகளை உரிய தணிக்கைக்கு சமர்ப்பிக்காதவர்கள் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறார்கள் என்பது குறித்து குறிப்பிட்ட விதிமுறை எதுவும் இல்லையென்று கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »