Our Feeds


Tuesday, July 23, 2024

SHAHNI RAMEES

எத்தியோப்பியாவில் கோர நிலச்சரிவு..! – 55 பேர் பலி.

 

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று (22ஆம் திகதி) கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மற்றொரு குழுவினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் தற்போது நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »