வஹாப் வாதத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று ஜம்இய்யதுல் உலமா சபை என்னிடம் கூறியது என இலங்கை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
2016 ஆண்டு நான் நீதி அமைச்சராக இருந்த போது அகில. இலங்கை ஜம்மியதுல் உலமா உறுப்பினர்கள் என்னை சந்தித்தார்கள். அஸாத் சாலியும் அவர்களோடு வந்தார். அவர்கள் வாஹாப்வாத அடிப்படைவாத புத்தகங்களை எடுத்து வந்திருந்தனர். அந்த புத்தகங்களில் உள்ள விடயங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்த கொள்கைகள் என அவர்கள் கூறினர்.
இதனால் இலங்கையில் வாழும் சம்பிரதாய முஸ்லிம்களுக்கு பாதிப்பு என அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விடயத்தை நான் பாதுகாப்பு தரப்பிற்க்கு சுட்டிக்காட்டியும் பயன் கிடைக்கவில்லை. இதை பேசப்போய் என்னை இனவாதியாக்கி அமைச்சு பதவியில் இருந்து விரட்டிவிட்டார்கள் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.