மூன்று வயதுடைய குழந்தையொன்று வீட்டின் தண்ணீர்
தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.கிழக்கு மித்தெனிய பகுதியைச் சேர்ந்த சமரகோன் முதியன்சே என்பவரின் புதல்வரான அயன் கோவிஜா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் தனது ஒன்பது வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது குழந்தையையும் வீட்டிற்கு வெளியே உள்ள தண்ணீர் தொட்டிக்கு அழைத்துச் சென்று உடலைக் கழுவ அழைத்துச் சென்றுள்ளார்.
ஒன்பது வயது குழந்தையின் உடலைக் கழுவிய தாய், மூத்த குழந்தையுடன் வீட்டிற்குள் சென்றபோது, சிறு குழந்தை தண்ணீர் தொட்டிக்கு அருகில் இருந்தது.
திரும்பி வந்து பார்த்த போது சிறு குழந்தை தண்ணீர் தாங்கிக்குள் விழுந்து கிடப்பதைக் கண்டு குழந்தையை மீட்டு மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மித்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.