Our Feeds


Tuesday, July 23, 2024

Zameera

20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை


 இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான் என்பதும் தெரியவந்துள்ளது.

இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற முடியும் என தெரியவந்துள்ளது.

நகர்ப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், கிராமப்புற மக்களில் நான்கில் ஒரு பகுதியினரும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும், தோட்டப்புற மக்களில் 3.1% மட்டுமே பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்நாட்டு மக்களில் 70% க்கும் அதிகமானோர் தங்கள் வளாகங்களில் மேம்படுத்தப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி குடிநீரைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் 6.3% அடிப்படை சுகாதார சேவைகளைப் பயன்படுத்துவதில்லை  என்றும் 0.1% வீதமான  மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 84.9 வீதமான குடும்ப மக்கள் மூடிய கழிவறைகளைப் பயன்படுத்துவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »