Our Feeds


Tuesday, July 23, 2024

Zameera

அஸ்வெசும 2ம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பு ஜூலை 31 நிறைவு


 அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கணக்கெடுப்பு நடவடிக்கையை கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கு கண்காணிப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விஜேரத்ன தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் வறியவர்கள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ் ‘அஸ்வெசும’ நலன்புரி நலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழமைபோல் வழங்கும் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த நலன்களுக்கு விண்ணப்பிக்கும் போது எப்போதும் மிகச்சரியான தகவல்களை வழங்குமாறும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன கேட்டுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »